அதிக கடன்களை கொண்ட நாடுகள் எவை தெரியுமா..! முதலிடத்தில் இது தான்
கொரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் திரட்டப்பட்ட மொத்த கடன் தொகையில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இதனால் கடனாளிகளான நாடுகள் மேலும் கடனாளிகளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
உலக நாடுகளில் உள்ள கடன் தொகையை கணக்கிட்டு உலகின் அதிக கடன்களை கொண்ட பிரபல நாடுகளின் விபரம் சமீபத்திய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஆசிய நாடான ஜப்பான் அதிகப்படியான கடனான 10.1 ரில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டுள்ளது. 127.18 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 256% கடனைக் கொண்டுள்ளது.
அதேவேளை, கிரீஸ் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 415.35 பில்லியன் டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 191.5% ஆகும்.
பிரான்ஸின் மொத்தக் கடன்
உலக மதிப்பீட்டின் படி, இத்தாலி மொத்தக் கடன் 2.94 ரில்லியன் டொலர்களாக உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 172.5% சதவீதம் ஆகும்.
பிரான்ஸின் மொத்தக் கடன் 3.478 டிரில்லியன் டொலர்களாக உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 137.7% சதவீதம் ஆகும்.
அமெரிக்கா மொத்தக் கடன் 36.8 ரில்லியன் டொலர்கள் ஆகும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 144.4% சதவீதம் ஆகும்.
ஸ்பெயினின் மொத்தக் கடன் சுமார் 1.74 ரில்லியன் ஆகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 142.7% ஆகும்.
பட்டியலில் கனடா
2.52 டிரில்லியன் டொலர் கடனுடன் கனடாவும் பட்டியலில் உள்ளது. கனேடியர்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 112.8% கடனைக் கொண்டுள்ளனர்.
மேலும், பெல்ஜியத்தின் மொத்தக் கடன் சுமார் 640.3 பில்லியன் டொலர்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் வரி 103.8% ஆகும்.
YOU MAY LIKE THIS