அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் ஒப்படைக்காத டயனா கமகே
முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் இதுவரை கையளிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதன்படி, டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டது. இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட வாகனங்களை மே மாதம் 08 ஆம் திகதி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
டயனா கமகே பயன்படுத்திய 4 வாகனங்கள்
எனினும் நேற்றைய தினம் வரையில் இந்த வாகனங்கள் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ஒப்படைக்கப்படாத வாகனங்களில் டிஸ்கவரி ஜீப், கெப் வண்டி, பிராடோ ஜீப் மற்றும் கார் ஒன்றும் காணப்படுகின்றது.
இவற்றில் கெப் ரக வாகனமானது விபத்துக்குள்ளான காரணத்தினால் குருணாகல் காவல்துறையினரின் பாதுகாப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |