பிள்ளையானால் திட்டமிட்டு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு

Pillayan Sri Lanka Politician Sri Lanka
By Shalini Balachandran Jan 10, 2025 05:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையான்) (Sivanesathurai Chandrakanthan) தனக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் (Nesakumar Vimalraj) தெரிவித்துள்ளார்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் பதவி வகித்த வேளையில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவரால் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை சீண்டி ஹவுதி இழைத்த மிகப்பெரிய தவறு: கதிகலங்கும் மத்திய கிழக்கு

இஸ்ரேலை சீண்டி ஹவுதி இழைத்த மிகப்பெரிய தவறு: கதிகலங்கும் மத்திய கிழக்கு

தொடர்ச்சியாக அச்சுறுத்தல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னர் பதவி வகித்த அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இருந்து கொண்டு எனக்கு அவருக்குரிய சிறப்புரிமையையும் பாவித்து நாடாளுமன்றத்திற்குள்ளும் அவருக்கு இருக்கின்ற அரசியல் செல்வாக்கை பாவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன.

அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் அவ்வப்போது காவல் நிலையத்திலே முறைப்பாடு செய்திருந்தேன்.

குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பாக அதாவது என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும்  அவ்வாறு செல்லாது இருந்தால் அங்கு போவேன், இங்கு போவேன் என கூறினால் இது கோட்டபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) அரசாங்கம் இதில் என்ன நடக்கும் என தெரியும்தானே.

பிள்ளையானால் திட்டமிட்டு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு | The Accusations Leveled Against Pillayan

நான் உன்னை கௌரவமாக அனுப்ப வேண்டும் என நினைக்கின்றேன் இல்லையேல் நீ அவமானப்பட்டு போக வேண்டி வரும் என என்னை அவர் எச்சரித்து அச்சுறுத்தி இருந்தார்.

அது மாத்திரமன்றி அவருடன் சேர்ந்த இன்னும் இருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய செயற்பாடுகளுக்கு என்னை ஒத்துப் போகுமாறும் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.

அது தொடர்பான ஒலிப்பதிவுகள் அனைத்தும் நான் காவல்துறையினரிடம் ஒப்படைத்து இருக்கின்றேன் இந்த வழக்குத் தொடர்பில் காவல்துறையினரால் எனக்கு கடிதம் தரப்பட்டிருக்கின்றது.

யாழ். பல்கலையில் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்

யாழ். பல்கலையில் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்

நீதிமன்றத்திலே சமர்ப்பணம் 

அந்த கடிதத்திலேயே குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரை காவல்துறையினர் தொடர்பு கொள்வதாகவும் ஆனால் அவர் வாக்குமூலம் வழங்குவதற்கு முடியாமல் இருப்பதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்திலேயே அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால், அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என்பதை அவர்கள் அப்போது குறிப்பிட்டிருக்கவில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திலே சமர்ப்பணம் செய்யப்பட்டு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவர் இரண்டு கடிதங்கள் வரவில்லை என தெரிவித்திருந்தார் பின்னர் அவருடைய காரியாலயத்தின் கதவினிலே ஒரு அறிக்கை ஒட்டப்பட்டது.

இந்தநிலையில்தான், அவர் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவரினால் எனக்கு குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவெனில் அவருடைய காலப்பகுதியில் அவருடைய செயற்பாடுகளுக்கு நான் துணை போகவில்லை என்பதற்காக அவர் என்னை திட்டமிட்டு பல அச்சுறுத்தல்களை விட்டிருந்தார்.

பிள்ளையானால் திட்டமிட்டு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு | The Accusations Leveled Against Pillayan

அந்த அச்சுறுத்தலின் விளைவாக அரச உத்தியோகத்தர் ஆகிய நான் நிற்கதிக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்கனவே நான் அரச கடமையில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கும் உள்ளாக்கப்பட்டிருந்தேன் அதன் பின்னர் எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த பாதுகாப்பைகூட மீளப் பெறுவதற்கு இவருடன் சேர்ந்த இன்னும் சிலர் ஒன்று சேர்ந்து பிழையான அறிக்கைகளை அறிவித்து என்னுடைய பாதுகாப்புகளை நீக்குவதற்காக செயற்பட்டிருந்தார்கள் அதற்காகவும் நான் உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கின்றேன்.

அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே இவருடைய பதவிக்காலத்திலே அரசாங்க கடமையை மேற்கொள்வது என்பது ஒரு பெரியதொரு துர்ப்பாக்கிய நிலைமையாகவே இருந்தது.இதனை அனைவரும் அறிவார்கள்.

குறிப்பாக அவர் சில இடங்களிலே குறிப்பிடுகின்றார், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு, தனவந்தர்களுக்கும், நான் காணி கொடுத்ததாகவும் தெரிவித்து வருகின்றார்.

காணி மோசடியிலே நான் ஈடுபட்டிருந்தால் காவல்துறையினர் காணப்படுகின்றனர், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு காணப்படுகிறது, இவ்வாறான இடங்களில் இன்றுவரையில் எனக்கு எதிராக நான் மோசடியாக செயற்பட்டனோ காணியை விற்பனை செய்தேனோ என எந்த விதமான விசாரணைகளோ வழக்குகளோ யாரும் தாக்கல் செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025