எங்களை வைத்து வியாபாரம் செய்வதே நோக்கம் : முன்னாள் போராளிகள் பகிரங்கம்
எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல்வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் (Vavuniya) நேற்று (17.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ''எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சைக் குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வன்னியில் அவயவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநாதைகளாக உள்ள அவர்களை இந்த அரசியல்வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. எம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம்.
எனவே நேரடியாக பாதிக்கப்பட்ட எமக்கே அந்த விடயங்கள் புரியும். எனவே எமது தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இந்த தேர்தலில் நாம் நிற்கிற்றோம்'' என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |