மின் கட்டணத்தை குறைப்பதே நோக்கம்: கஞ்சன விஜேசேகர அறிவிப்பு
மின் கட்டணத்தை குறைப்பதே இலங்கையின் மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான புதிய வர்த்தமானியின் நோக்கம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானிக்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் கூறினார்.
மின்சக்தி அமைச்சில் இன்று (19) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே, கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டமூலம் தொடர்பான வர்த்தமானியின் நோக்கம்
இந்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி இரண்டு பிரதான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நிர்வாகச் செலவைக் குறைப்பது மற்றும் மின்னுற்பத்தி செலவைக் குறைத்து, எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வரவுள்ளதாக கஞ்சன விஜேசேகர கூறினார்.
இந்த நிலையில், முறையான ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வின்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |