தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டதல்ல : மனோ கணேசன் பகிரங்கம்
தமிழ் பேசும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. இது ஒரு பொது மேடை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொது நோக்கத்திற்காக குறைந்தபட்ச அடிப்படையிலே 6 தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் இணைந்து ஒரு மேடை அமைத்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் ஏனைய தலைமைகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புக்களையும் ஒரே இலங்கைக்குள் பெறுவதற்கான சாத்தியப்பாடுகளை அணுகும் முகமாக தான் இந்த மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஐபிசி தமிழின் “களம்“ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பல கட்சிகளும் மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்திற்குள்ளே மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள் ஆனால் நடத்தவில்லை.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 10 மணி நேரம் முன்