அநுரவின் அரசியல் ஆட்டத்தில் இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படுமா!
ஆண்ட கட்சிகளின் மீதான இளைஞர்களின் வெறுப்பே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் (Gopalallai Amritalingam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய இளைஞர்கள் பதவிக்கு வர வேண்டும் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமென வடக்கு மற்றும் கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி எங்கிலும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.
அநுர தரப்பினர்
கடந்த காலத்தை விட அநுர தரப்பினர் எதிர்காலத்தில் மாற்றம் தருவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் உட்பட அணைவரும் புதிய தலைமையையே எதிர்பார்க்கின்றனர்.
மேலும், அநுர ஆட்சியில் இளைஞர்களின் வகிபங்கு, புதிய தலைமைகள், படித்தவர்களின் அரசியல் வருகை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் அநுரவின் தொடர்பு மற்றும் கடந்த கால ஆட்சிமுறையின் தவறுகள் என்பவற்றை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |