இலங்கையில் மிகப்பெரிய பேரழிவு -வெளிநாட்டு செய்திச்சேவை ஆதாரத்துடன் அறிவிப்பு
srilanka
sea
disaster
By Sumithiran
கொழும்பு கடற்பரப்பில் திப்பிற்றி எரிந்து தற்போது மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்லைச் சுற்றி பாரிய எண்ணெய் கசிவை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று நியூசிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் மிகப்பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவு என்றும், கப்பலைச் சுற்றி எண்ணெய் கசிவுகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 23 தொன் நைட்ரஸ் ஒக்சைட் மற்றும் அமில மீத்தேன் இருப்பது கடுமையான பிரச்சினையாக இருப்பதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூர் நிர்வாக தலைமை நிர்வாகி ஷுமால் சமீபத்தில் எகப்பலில் இருந்து எந்தவொரு எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்