விற்பனைக்காக கொண்டு சென்ற பேருந்துக்கு ஏற்பட்ட நிலை
விற்பனைக்காக கொண்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று மேல் வீதியில் இருந்து கீழ் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மெத-மஹனுவர 'வங்கு தெக' என்ற இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மூவர் படுகாயம்
விபத்தில் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி, அதன் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவர் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விற்பனைக்காக கொண்டு சென்றவேளை
பிபில பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் சேவைப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த பேருந்து, கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட போது விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உடதும்பர காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் துசித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |