மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

Northern Province of Sri Lanka Nalinda Jayatissa
By Pavi Sep 02, 2026 06:28 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகள் 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஊடாக ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

அமைச்சரவை அனுமதி

2026 ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 21.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் | The Cabinet Has Granted Approval

தற்போது Mines Advisory Group (MAG), The HALO Trust, Delvon Assistance for Social Harmony (DASH) மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) ஆகிய நான்கு நிறுவனங்கள் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், 2026 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறித்த நான்கு நிறுவனங்களுடனும் தலா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பாக விடுவித்து, மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தேவையான நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016