சிறிலங்கா பாதாளங்களின் சிக்காகோ பாணி! நீதிபதி முதல் சட்டவாளர்வரை படுகொலைகள்!
இந்திய அணி நேற்று கொழும்பு பிரேமதாச மைதானத்தின் ஆடுகள சவாலை எதிர்கொண்டு சிறிலங்காவின் இன்னொரு நண்பனும் தனது பரம எதிரியுமான பாகிஸ்தானுக்கு எந்தவொரு வாய்ப்பும் கொடுக்காமல் அதனுடனான ரி- 20 துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்றது.
இந்திய பெரியண்ணர் தரப்பு பெற்ற இந்த வெற்றியை மைதானத்தின் உயர் மட்ட பிரமுகர்களின் பகுதியில் அமர்ந்திருந்து ஆட்டத்தை ரசித்த சிறிலங்காவின் அரசதலைவர் அநுரவும் கண்டுகொண்டார்.
இலங்கை மண் இப்போதைக்கு இந்தியாவுக்கே வெற்றியை வழங்கியது என்ற செய்தியின் பின்னணியில் இந்தவாரம் அநுர குமார திசாநாயக்க டெல்லிக்கு பறக்கவுள்ளார்.
கைகுலுக்கல் தவிர்ப்பு ராஜதந்திரத்துடன் ஆடிய இந்த அணிகளின் போட்டியால் நேற்றுக்காலை முதல் கொழும்பில் உருவாக்கபட்ட சிறப்பு பாதுகாப்பு தளர்த்தப்பட்டாலும் பாதாள உலக கும்பல்களின் வீதிபோட்டுத்தள்ளல்கள் குறித்த அச்சம் இன்னும் அதன் வீதிகளில் வலுவாக தொடர்கிறது.
கடந்த வெள்ளியன்று கொழும்பின் புறநகரான அக்குரேகொட பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு தலைமையகத்துக்கு அருகில் வைத்து இரண்டு துப்பாக்கிதாரிகளால் ஒரு வழக்கறிஞரும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் சட்டவாளர்கள் பணிப்புறக்கணிப்பை செய்தமை அரசாங்கத்துக்கு சிக்கலாக உருவெடுக்கிறது.
சிறிலங்காவில் 22 வருடங்கங்களுக்கு முன்னர் 2004 நவம்பர் 19 இல் அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சரத் அம்பேபிட்டிய பாதாள உலக குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒரு சட்டமுகத்தின் கொலையாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதால் நாட்டின் சட்டவாளர் சங்கமே இந்த கொலைகளுக்காக அலறுவதால் அநுர தரப்பின் தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் அமைப்பு ஒரு அலறல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |