நாட்டில் தொடரும் துயரம்! வாவியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
Police
Batticaloa
Death Body
SriLaka
By Chanakyan
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த யோகநாதன் ராயூ (வயது-24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.