முள்ளிவாய்க்கால் படுகொலை குற்றவாளிகள் சட்டத்தின் முன்...! பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர்
முள்ளிவாய்க்கால், காணாமல் போனவர்களை நினைவு கூர்வதுடன் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய (UK) தொழிற் கட்சியின்(Labour Party) தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும், பரந்த மனித உரிமை மீறல்களையும் நினைவுகூருகிறோம்.
தமிழினப் படுகொலை
இன்று, என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பி பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து வாழ்பவர்கள் நோக்கியே உள்ளது.
இறுதி போரில் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதுடன், அட்டூழியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் இந்நாள் இருக்க வேண்டும்.
எமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளை நிதானித்து சிந்திக்கும்போது, நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வை நோக்கி உழைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிற் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Statement from The Rt Hon Sir @Keir_Starmer Leader of @labour for 15th Year #Mullivaikkal #Genocide Remembrance Day
— British Tamils Forum (BTF) (@tamilsforum) May 24, 2024
"On Mullivaikkal Remembrance Day, we commemorate the tens of
thousands of #Tamil people who were killed & the widespread #HumanRights abuses in the final...." 👇 pic.twitter.com/kfgOfTmunE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |