தமிழீழ கோர யுத்தத்தின் வடுக்களை மூடி மறைக்கும் அவலம்: ஈழத்து பெண் இசையமைப்பாளரின் ஆதங்கம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கோர யுத்தம் முடிவடைந்து அதன் வடுக்கள் இன்றும் தொடரும் நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் மாண்டொழிந்த எம்மவரின் வலிகள் மூடி மறைக்கப்படுவதாக இலங்கையின் முதல் பெண் தமிழ் இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெள்ளி தட்டில் அள்ளித்தரும் அமுதமல்ல எங்கள் தமீழீழம் அத்தோடு நாங்கள் போராட வேண்டும் இது எங்களுடைய நிலம் இதை நாங்கள் உங்களுக்கு அள்ளித்தர முடியாது.
தற்போதிருக்கும் தலைமுறைக்கு இந்த போரின் வலி புரியாது அத்தோடு அவர்கள் போர் நடந்த காலப்பகுதியை தாண்டி வந்துவிட்டனர்.
அத்தோடு, தற்போது உள்ள தலைமுறையினரிடையே போரென்ற ஒன்றே நடக்காதது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் மாத்திரமே அந்த வலி புரியும்" என அவர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |