நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்! ஒருவாரத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை வெளியாகியது
Death
Police
Accident
Ajith Rohana
SriLanka
By Chanakyan
நாட்டில் கடந்த ஜூலை 24 முதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காலக் கட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களால் நேற்றைய தினம் மாத்திரம் ஒன்பது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி