திடீர் என தீப்பற்றி எரிந்த வாகனம் - தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி..!
Mannar
Sri Lanka
By Kiruththikan
மன்னார் முருங்கன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்றைய தினம் புதன் கிழமை வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெரிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் .
மன்னார் மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய ரக பட்டா வாகனத்தின் இயந்திர பகுதி திடீர் என தீப்பற்றிய நிலையில் வாகன சாரதி மற்றும் உதவியாளர் துரித கதியில் வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவதுமாக தீபரவல் ஏற்பட்டு முழுமையாக வாகனம் எரிந்து நாசமாகியுள்ளதுடன் சாரதியியும் உதவியாளரும் எந்த வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்