பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை
இலங்கை மின்சார சபை குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையின் தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
மின்சார பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறு
இதனை நிராகரிக்கும் முகமாகவே இலங்கை மின்சார சபை மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின்சார பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இது இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார சபை பகுதிகளாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீரமைக்க 5 மணித்தியாலங்களுக்கு மேல் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |