நிலக்கரி ஊழல் : முழு அமைச்சரவையையும் பதவி விலக கோருகிறார் பீரிஸ்
நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (23) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சரின் பதவி விலகல் மட்டும் பயனற்றது என்று கூறிய பீரிஸ், எரிசக்தி அமைச்சர் ஒரு கைப்பாவை மட்டுமே என்றார். கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
முழு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஊழல்
முழு அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த மோசடி ஊழல் படிப்படியாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதற்கான பொறுப்பை முழு அரசாங்கமும் கூட்டாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் கூறினார்.

எனவே, சட்டத்தையும், பாரம்பரியத்தையும், நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மதித்து, முழு அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதைச் செய்யாவிட்டால், எதிர்கால அரசாங்கம் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தெளிவான நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |