யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

Jaffna Eelam People's Democratic Party Douglas Devananda General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Oct 07, 2024 08:27 AM GMT
Report

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (07) நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

தண்டனைக்குரிய குற்றம்..! தேர்தலில் போட்டியிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு

தண்டனைக்குரிய குற்றம்..! தேர்தலில் போட்டியிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | The Epdp Filed Its Nomination Today In Jaffna

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா ''வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்கலாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என குறிப்பிட்டார்.

இதன்போது கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர்,கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துவந்திருந்தனர்.அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது.

300ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்பில் உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

300ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்பில் உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை


கொழும்பில் போட்டி

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | The Epdp Filed Its Nomination Today In Jaffna

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிடிபி கட்சியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள சீலரதன தேரர்

மொட்டுக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள சீலரதன தேரர்

மேலதிக தகவல்கள் - பிரதீபன், கஜிந்தன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025