300ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்பில் உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்( Presidential Security Division) இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்துறை பிரிவுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 307 காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258(1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளும் அடங்குவர்
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 11 தலைமை ஆய்வாளர்கள், 5 ஆய்வாளர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்குவர்.
இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாக கடமையாற்றிய 24 காவல்துறையினரின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
அநுர குமாரவின் வாக்குறுதி
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பணிக்கான படையினர் விலக்கி கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake) தனது தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |