ஹெரோயின் விற்பனை : மதுவரி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர் சிக்கினர்
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் மதுவரி உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட 5 பேரை அலவத்துகொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையின் போது, போதைப்பொருளை வழங்கிய நபர் பற்றிய தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முகவர் ஒருவரை பயன்படுத்தி போதைப்பொருளை கொள்வனவு
இதனையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி போதைப்பொருளை கொள்வனவு செய்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிக்கிய கலால் அதிகாரி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் கொழும்பு கலால் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் கலால் அதிகாரி என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மதுவரி உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கொழும்பில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் ஒருவரும் அவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை, அலவத்துகொட, கொழும்பு போன்ற இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கலால் அதிகாரி மற்றும் உதவி வங்கி முகாமையாளரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |