உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்: இவர்கள் யார் தெரியுமா..!
உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருப்பவர்களாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் (Royal Family) இருந்து வருகின்றனர்
அதன்படி, உலகில் உள்ள அவர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் பராமரிப்பதற்கு மாத்திரம் தனியாக ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது.
இரண்டாம் எலிசபெத் ராணி (Elizabeth II) உயரிழந்த பின்னர் பிரித்தானியாவின் மன்னராக முன்றாம் சார்லஸ் மன்னர் (Charles III) முடிசூட்டப்பட்டார்.
தனிப்பட்ட உரிமையாளர்
இதனை தொடர்ந்து, முன்றாம் சார்லஸ் மன்னர் உலகிலேயே அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.
எவ்வாறாயினும், அந்த நிலங்களும் சொத்துக்களுக்கும் அவர் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல, மன்னராக இருக்கும் வரை மாத்திரமே இவை அவருக்கு சொந்தமாகவிருக்கும்.
உலகின் மொத்த செல்வம்
இந்நிலையில், மன்னர் சார்ள்ஸ் உலகம் முழுவதுமாக 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா ஆகிய பல நாடுகளில் இருக்கின்ற நிலையில், உலகின் மொத்த செல்வத்தில் 16.6% பிரித்தானிய மன்னரிடம் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |