ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்
ரஷ்யாவில் இந்தியர் உள்பட எட்டு பேர், கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சந்தேக நபர், தம்மிடமிருந்த கத்தியால் அங்கிருந்த மாணவர்களை தாக்கியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் அந்த சந்தேக நபரரை பிடிக்க முற்பட்ட போது காவலர்களையும் அவர் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபர் கத்தியால் தன் உடலைத் தானே கிழித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்துள்ளனர்.
உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் எதற்காக மாணவர்களைக் குறிவைத்து கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |