காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சிறுமி - தீவிர விசாரணையில் காவல்துறை
காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சிறுமி
ஏழு வயது சிறுமி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி – தெல்வல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமை தொடர்பில் கறுவாத் தடியால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை
எனினும், தாக்குதலுக்கு உள்ளான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சிறுமியின் தாயாருடன் வசிக்கும் நபரை மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்ய காவல்துறையினர் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த அனைவருடனும் குறித்த நபர் காட்டிற்குள் சென்று தலைமறைவாகியுள்ளார்.

ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 7 வயது சிறுமி, இதன்போது உயிரிழந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து காட்டில் இரகசியமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாக தெரியவருகிறது.