அரசாங்கத்தின் சட்டமூலம் நகைப்பிற்குரியது - எதிர்க்கட்சி கிண்டல்
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளுந்தரப்பினர் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அவ்வாறிருக்கையில் தற்போது அந்தச் சட்டமூலத்தில் குறைந்தபட்சம் நிறுத்தற்குறியீடுகளில் கூட மாற்றங்களைச் செய்யாமல் அதனை அவ்வாறே சமர்ப்பித்திருப்பது நகைப்பிற்குரிய விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தில் திருத்தங்களைச்செய்து அதனை நிறைவேற்றுவதென்பது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென்பதால், அதனை முழுமையாக மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.