அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது - மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
goverment
easter attack
mahinda rajapaksha
By Sumithiran
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்காக அனைத்து தரப்பு சந்தேக நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் பிரதமர் கூறினார்.
இது தொடர்பில் சட்டமா அதிபர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழு ஆதரவை வழங்குவதாக பாப்பரசர் பிரான்சிஸ்(Pope Francis) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.