2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் : அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்
இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவிகள் செய்தது.
ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம்.
அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது.
இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் உருவாகியிருக்கக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
