மனைவியை வாள் வெட்டுக்கு உட்படுத்திய கணவன்! யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் - இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை நேற்றைய தினம் (11) கோப்பாய் காவல்துறையினர் கைது செய்ததாக தெரியவருகிறது.
கடந்த மாதம் இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை, கணவனொருவர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
தாக்க பயன்படுத்திய வாள்
இந்நிலையில், சந்தேகநபர் கடந்து பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.
அதேவேளை மனைவியை தாக்க கணவன் பயன்படுத்தியதாக கூறப்படும் வாள் ஒன்று சந்தேகநபரின் வீட்டு கோழிக்கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்