இளம் மனைவியை கொலை செய்த கணவன்
Attempted Murder
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
குடும்பத் தகராறு காரணமாக தனது இளம் மனைவியை கோரமாக கொன்ற கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.23 வயதுடைய தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் இளம் தாயொருவரே கொல்லப்பட்டார்.
மனைவி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில்
குடும்பத்தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்றபோது மனைவி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததாக தெரிவித்தனர்.
அரநாயக்க காவல்துறையினரால் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததையடுத்து பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது.
உயிரிழந்த பெண்ணை தாக்க பயன்படுத்தப்பட்ட தடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்