கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் கோடிக்கணக்கில் அதிகரிப்பு
ஐந்து கோடி ரூபாவாக இருந்த கதிர்காமம் ஆலயத்தின் வருமானத்தை கடந்த வருடம் நாற்பது கோடி ரூபாவாக அதிகரிக்க முடிந்ததாக கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பஸ்நாயக்க நிலமேயாக தாம் பதவியேற்கும் போது ஆலயத்தின் வருமானம் வருடத்திற்கு ஐந்து கோடியாக இருந்த நிலையில் கடந்த வருடம் வருமானத்தை நாற்பது கோடியாக அதிகரிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
ஒரு ரூபாய் கூட திருடவில்லை
கோவிலில் கிடைத்த பணத்தில் ஒரு ரூபாய் கூட திருடவில்லை என்றும், திருடப்பட்ட பணத்தில் குழந்தைகளுக்கு உணவு, பானங்கள் கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு
கதிர்காமம் விகாரையில் கிடைக்கும் வருமானத்தில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பூரணமான கட்டிடமொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அது இன்னும் சில வாரங்களில் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போகஹபலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        