நான்கு வருடங்களுக்கு பின்னர் பிடிபட்ட கொலையாளி
Sri Lanka Police
Attempted Murder
By Sumithiran
மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தடியால் அடித்து நபரை கொன்று பருத்தி விவசாயி போல் மாறு வேடமணிந்து நான்கு வருடங்களாக தலைமறைவாக இருந்த ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக தெபுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெபுவன, கோட்டையாஹேன பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை
சந்தேக நபர் நான்கு வருடங்களுக்கு முன்னர் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருந்த போது நீதிமன்றத்தை தவிர்த்து வந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி