கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இந்தியாவிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இந்திய அரசாங்கம் ராஜபக்ச அரசை ஆதரிக்க வேண்டாம் எனவும் மாறாக மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் கொழும்பில் அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
மின்வெட்டு, எரிபொருளுக்கு வரிசை,அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசை,மருந்து தட்டுப்பாடு, பொருட்களின் கடுமையான விலையேற்றம் என மக்கள் நாளாந்தம் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது.
இவற்றை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர்.கோட்டாபய உட்பட அரசின் முக்கிய அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில்,
ராஜபக்ச அரசை ஆதரிக்க வேண்டாம் என்று நான் இந்திய அரசிடம் கூற வேண்டும். இந்தியாவின் உதவிக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம் ஆனால் இந்த இக்கட்டான சூழலின் போது இலங்கை மக்கள் பக்கம் இந்திய அரசு நிற்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
