கோட்டாபய அரசாங்க வீழ்ச்சியின் பின்னணியில் இருந்த நபர்! சபையில் அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்ததற்கான காரணத்தை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினை
இதன்படி, கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே எரிபொருள் இருப்பதாக அறிவித்ததாகவும், அதனால் பீதியடைந்த மக்கள் பீப்பாய் (பரல்) கணக்கில் எரிபொருளை சேகரித்து சென்றதாகவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கத்தின் விளையாட்டு
இந்த விடயத்தின் மூலம், கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் முயன்றது அந்த அரசாங்கத்திலேயே இருந்த ஒரு அமைச்சர்தான் என அவர் அடித்து கூறியுள்ளார்.
இவ்வாறானதொருபின்னணியில், தற்போதைய அரசாங்கத்திலும் இன்று அதுதான் நடந்துக் கொண்டு இருப்பதாகவும், அரசாங்கம் இப்போது குரங்குகளை எண்ணும் விளையாட்டை ஆரம்பித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
