பி.சி.ஆர் பரிசோதனை செய்த தாதியை மோசமாக தாக்கிய பிக்கு! காரணம் என்ன?
சிலாபம், ஆனமடுவ பிரதேசத்தில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் போது, வேதனை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பிக்கு ஒருவர் தாதியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில், பிக்குவிற்கு பி.சி.ஆர் பரிசோதனை எடுத்த தாதி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதே வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிக்குவுக்கு குறித்த தாதியினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, தனக்கு வலி ஏற்பட்டமையினால், அருகிலிருந்த கண்ணாடி பீங்கானைக் கொண்டு குறித்த பிக்கு தாதியை தாக்கியுள்ளார்.
தாதியை தாக்கிய பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.