பசிலுக்கு வழங்கப்படும் அமைச்சுப்பதவியில் திடீர் மாற்றம்
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும் அவருக்கு பிரதமர் மகிந்த வசமுள்ள நிதியமைச்சு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் தற்போது நிதியமைச்சு பதவி அவருக்கு வழங்கப்படாது எனவும் அது தொடர்ந்தும் பிரதமர் மகிந்தவின் வசமே இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பசில் ராஜபக்சவிற்கு என புதிய அமைச்சொன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை இணைத்து புதிய அமைச்சொன்று பசில் ராஜபக்சவிற்காக உருவாக்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சின் பல செயற்பாடுகள் இந்த அமைச்சிற்கே மாற்றப்படும் எனவும் அவை தெரிவித்துள்ளன.
எனினும் இது குறித்த இறுதி முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை மாற்றங்கள் இருக்கலாம் ஆனால் பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் செல்வது உறுதி என அவை தெரிவித்துள்ளன.