வெளிநாடு பறக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு
பொருளாதார நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கையர் பலர் உள்நாட்டில் வேலையின்றி தவிக்கின்றனர்.
குறிப்பாக கட்டுமாண தொழிலில் ஈடுபட்டோர் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வேலைகளை இழந்துள்ளனர்.இதனால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும் அதிகரித்த வாழ்க்கைச் செலவை ஈடு செய்யவும் தொழில்களை தேடி வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 2,37,649 பேர் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
கடந்த வருடம் முழுவதும் சுமார் 1,22,000 பேர் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றிருந்ததாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க கூறினார்.
இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.