காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : இன்று இரவு வாளுடன் சிக்கிய நபர்
Sri Lanka Police
Ampara
Sri Lanka Police Investigation
By Sumithiran
அம்பாறை (ampara)மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வாள் ஒன்றை உடைமையில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் இன்று இரவு(23) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இரண்டரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேக நபர் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி