இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது பெட்ரோலிய சட்டமூலம்...!
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
சட்டம்
கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறுத்துவதற்கான பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) முற்பகல் அறிவிதுள்ளார்.
புதிதாக அனுமதிபெறுபவர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்தல் இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.
அதற்கமைய, 2022 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமாக இந்தத் திருத்தச் சட்டமூலம் இன்று (21) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி