பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
ஜப்பானை சேர்ந்த நிப்பொன் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் ஒன்று பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறப்பை ஆரம்பித்த சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள்
இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
நடுவழியில் திறந்த கதவு
விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததால் அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |