ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை : ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு
சாதாரணதர பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதற்கு பணியமர்த்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் பலருக்கு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் தலைமைப் பரீட்சார்த்திகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் ஒரு பகுதி வெட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்
மாணவர்களின் பரீட்சைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இது தொடர்பில் முதலில் கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில்,
திறைசேரியிலிருந்து பணம் கிடைத்தவுடன்
இது தொடர்பான கொடுப்பனவுகளில் 90% செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதி 140 மில்லியன் தொகையை அடுத்த கட்டமாக திறைசேரியிலிருந்து பணம் கிடைத்தவுடன் சில வாரங்களில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தலைமைப் பரீட்சார்த்திகளுக்கான கொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில கண்காணிப்பாளர்கள் உதவித்தொகை படிவங்களை தவறாக பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |