NPP உறுப்பினரின் கருத்தால் களேபரமான பருத்தித்துறை பிரதேச சபை
அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் பிரஜா சக்தியை கொண்டு வந்தோமென பருத்தித்துறை பிரதேச சபையில் என்பிபி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தால் சபையில் களேபரம் ஏற்பட்டது.
இந்த வருடத்திற்கான முதல் அமர்வாக பருத்தித்துறை பிரதேச சபை அமர்வானது நேற்று காலை 9:30 மணியளவில் தவிசாளர் யுகதீஸ் தலைமையில் பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது முதலாவது பிரேரணையாக அரசாங்கத்தின் பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் சபையில் கொண்டுவரப்பட்டது.
சபையில் கடும் அமளி துமளி
இதற்கு எதிராக வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாய் இல்லை.

அவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் இந்த பிரஜா சக்தியை கொண்டு வருகிறோம் என்ற ஒரு கருத்தை முன் வைத்தார் இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
குறித்த உறுப்பினரின் கருத்திற்கு தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள் தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை தமிழரசு கட்சியின் 9 வாக்குகளாலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்குமாக 10 வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 1 மணி நேரம் முன்