கோதுமை மா விலை அதிகரிப்பின் எதிரொலி - வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன
price
bakery products
wheat flour
priceincrease
By Sumithiran
450 கிராம் நிறை கொண்ட பாணின் விலை இன்று (12 ம் திகதி) முதல் ரூ .5 ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே. ஜெயவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து தின்பண்டங்களும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (11 ம் திகதி) முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை10 ரூபாவால் உயர்த்தப்பட்டதை அடுத்து சங்க உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பேக்கரி தொழில் இன்று மிகவும் கடினமாக உள்ளது. பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்படாவிட்டால் இந்தத் தொழிலை தொடர முடியாது என அவர் குறிப்பிட்டார்.