சவப்பெட்டிகளின் விலைகளும் அதிகரித்தன
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளன.
இதனால் மக்கள் தாங்க முடியாத பொருளாதார நெரு்க்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

சவபெட்டிகளின் விலைகளும் அதிகரிப்பு
இந்த நிலையில் ஒருவர் இறந்தால் அவரை வைத்து அடக்கம் செய்யும் சவபெட்டிகளின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி