நிரம்பி வழியும் சிறைச்சாலை வைத்தியசாலை
சிறைச்சாலை வைத்தியசாலை நிரம்பி வழிவதாக சிறைச்சாலை புனர்வாழ்வு ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்ட 180 கைதிகளுக்கான வசிப்பிட வசதிகளை வழங்கும் திறன் இருந்தாலும், அந்த எண்ணிக்கை தற்போது 380 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு படுக்கையில் இரு நோயாளிகள்
சில சமயங்களில் நோயாளர்களின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக ஒரு படுக்கையில் இரு நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நோய்வாய்ப்பட்ட கைதிகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே சிறைக்கு அனுப்பப்படுவதாகவும், அதற்கேற்ப நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் அவர் கூறினார்.
அழைத்துவரப்பட்ட துமிந்த சில்வா
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு ஜனவரி 19ஆம் திகதி அழைத்து வரப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 28 சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,000 ஆகும். சிறைச்சாலைகளின் இடத்தை அதிகரிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள பல கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் காமினி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |