முன்னாள் சுகாதார அமைச்சரை கிண்டல் செய்த ஊடகத்துறை அமைச்சர்
பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொரோனா வைரஸை வெற்றி கொள்ள முடியாது என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொரோனா வைரஸை வெற்றி கொள்ள முடியாது. விஞ்ஞான முறையின் ஊடாக மாத்திரமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
ஒகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.
கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடு இலங்கை என்ற நிலைக்கு செல்வது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.