இந்தியாவை பகைத்துக் கொண்டதால் ஏற்பட்டநிலை - அம்பலத்துக்கு வந்த தகவல்
இந்தியாவை பகைத்துக் கொண்டமையே அந்நாட்டிடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமைக்கான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை பெறலாம் என நினைத்தோம். ஆனால் என்ன நடந்தது 500000 தடுப்பூசிகளை மாத்திரம் பெற முடிந்தது. கொழும்புதுறைமுக நகர திட்டம் காரணமாக இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டதால் இந்தியாவிடமிருந்து எங்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவிடமிருந்து தடுப்பூசி கிடைக்காதற்கு அரசாங்கம் தெரிவித்த காரணங்கள் பொய்யானவை என அவர் தெரிவித்தார். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஜனவரி 21ம் திகதி ஏற்பட்ட தீயே இந்தியாவிலிருந்து தடுப்பூசி கிடைக்காதமைக்கான காரணம் என அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள லக்ஸ்மன் கிரியல்ல இது உண்மையில்லை ஜனவரி 21ம் திகதிக்கு பின்னர் இந்தியா 7,575 000 தடுப்பூசிகளை ஏழு நாடுகளுக்கு வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை கொண்டுவரவேண்டும் என முதலில் வலியுறுத்தியவர் பீல்ட்மார்சல் சரத்பொன்சேகாவே எனவும் அவர் தெரிவித்தார்.
you may like this