40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்
மலேசியாவில் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான மகன் 40 ஆயிரம் கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு பௌத்த துறவியாகியுள்ளார்.
ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான வென் அஜன் சிரிபானியோ என்பவரே துறவற வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவராவார்.
சிறுவயது முதல் பௌத்த மதத்தின் மீது ஆர்வம்
சிறுவயது முதல் சிரிபானியோவிற்கு பௌத்த மதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. நாளாக நாளாக துறவியாக மாறும் எண்ணம் கொண்டு தனது 18 வது வயதில், ஒரு சிறு முயற்சியாக தற்கால துறவறத்தை மேற்கொண்டிருக்கிறார்.
பின்னர் அதன் மீது ஈடுபாடு ஏற்பட்டு நிரந்தர துறவியாக மாறியுள்ளார்.
யாசகம் பெற்று வாழ்க்கை
சிரிபானியோ தனது குடும்பத்தையும், கோடிக்கணக்கான சொத்துகளையும் துறந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
8 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர், தற்பொழுது தாய்லாந்தில் இருக்கும் பௌத்தமடத்தில் தலைமை பொறுப்பை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |