தங்கப்பாறையை எடுக்க சமயலறையை தோண்டிய நபருக்கு நேர்ந்த கதி
பிரேசில் நாட்டவர் ஒருவர் தனது சமயலறைக்கு அடியில் தங்கப்பாறை இருப்பதாக கூறி சுமார் 130 அடி தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது கனவில் ஆவி ஒன்று தோன்றியதாகவும், அது அவரது சமையலறைக்கு அடியில் தங்கப்பாறை ஒன்று இருப்பதாக கூறியதாகவும் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
அதன்பின்னர், பிரேசில் நாட்டவரான João Pimenta da Silva (71), அந்த தங்கப்பாறையை எடுக்கப்போவதாக கூறி சமையலறை தரையைத் தோண்டத் துவங்கியுள்ளார்.
130 அடி ஆழம்
ஒரு வருடமாக சுமார் 130 அடி ஆழம், அதாவது, 12 மாடிக் கட்டிடம் அளவுக்கு, ஆள் வைத்து, அவர்களுக்கு கூலி கொடுத்து குழி தோண்டி வந்துள்ளார்.
அவரது, நண்பர் பலமுறை எச்சரித்தும் அவர் அதனை பொருட்படுத்தாமல் அந்த வேலையை செய்து கொண்டே இருந்துள்ளார்.
தங்க ஆசை
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, ஜனவரி 5ஆம் திகதி, João அந்த குழியினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும், தங்க ஆசையில் பள்ளத்துக்குள் விழுந்து உயிரிழந்த நபரின் சடலத்தை தீயணைப்புக் குழுவினர் வந்து மீட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |