கொழும்பில் கொடூரம் : தந்தையை படுகொலை செய்த மகன்
கொழும்பு (Colombo) - கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தரின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குற்றத்தைச் செய்த 20 வயதுடைய உயிரிழந்தவரின் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
