நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் - வெளியான பின்னணி
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வி அமைச்சு (Ministry of Education) ஈடுபட்டுள்ளது.
வட மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அல்லது மூன்று மாணவர்கள்
இதேவேளை, நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டி விட்டதாக கல்வி அமைச்சு தெரிவிததுள்ளது.
அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பல சிறிய பாடசாலைகள்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள்.
மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
